×

தென் மாநிலங்களில் பாஜகவுக்கு பெரும் ஆதரவு உருவாகியுள்ளது: பிரதமர் மோடி பதிவு

டெல்லி: தென் மாநிலங்களில் பாஜகவுக்கு பெரும் ஆதரவு உருவாகியுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான, இந்தியாவின் 18வது மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.

அந்த வகையில் பிரதமர் மோடி; இன்று பகல் 12 மணி அளவில் தெலங்கானா மாநிலம் ஜாக்தியாவில் சாலை பேரணி நடத்துகிறார். பிற்பகல் 3 மணி அளவில் கர்நாடகா மாநிலம் ஷிவமொகாவில் சாலை பேரணி நடத்துகிறார். மாலை 5.45 மணி அளவில் தமிழகத்தில் கோவையில் சாலை பேரணி நடத்துகிறார். சேலத்தில் நாளை நடைபெறும் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். இன்று ஒரே நாளில் 3 மாநிலங்களில் சாலை பேரணி நடத்த உள்ள நிலையில் தேர்தல் சுற்றுப் பயணம், மக்கள் ஆதரவு குறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

அதில் “நான் இன்று ஜக்டியால், ஷிவ்மோகாவில் பிரச்சாரம் செய்கிறேன். மாலை கோவையில் சாலைப் பேரணியில் பங்கேற்கிறேன். தெலங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு எந்த மாநிலமாக இருந்தாலும் என்டிஏவுக்கு பலத்த ஆதரவு இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

The post தென் மாநிலங்களில் பாஜகவுக்கு பெரும் ஆதரவு உருவாகியுள்ளது: பிரதமர் மோடி பதிவு appeared first on Dinakaran.

Tags : BJP ,southern states ,PM Modi ,Delhi ,Modi ,southern ,India ,18th People's Election ,
× RELATED பிரதமர் மோடிக்கு மக்கள் ஓய்வு தருவார்கள் : காங்கிரஸ்